Connect with us

அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும்! உள் மாவட்டங்களில் பனிப் பொழிவு இருக்கும்!!

weather 2

செய்திகள்

அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும்! உள் மாவட்டங்களில் பனிப் பொழிவு இருக்கும்!!

அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும்! உள் மாவட்டங்களில் பனிப் பொழிவு இருக்கும்!!

நேற்றைய தினம் நம் தமிழகத்தை விட்டு வடகிழக்கு பருவமழை முற்றிலுமாக விலகியது. இதனை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் விளைவாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த நான்கு நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தலைநகர் சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் உள் மாவட்டங்களில் இரவு முதல் காலை வரை பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேகக் கூட்டங்களின் திரட்சி குறைவாக உள்ளதாலும் வறண்ட வானிலை நீடிப்பதாலும் குளிர் காலத்தில் கூடுதல் பனிப்பொழிவு பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் பனிப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட வட உள்மாவட்டங்களிலும் பனிப்பொழிவு இரவு இருக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் இரவில் பனிப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top