தைப்பிறந்தால் வழி இல்ல வெயிலே வெளுக்கும்; தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும்!
தை பிறந்தால் வழிபிறக்கும் என்பதைவிட தை பிறந்தால் தமிழகத்தில்தான் வெளுக்கும் என்பதுதான் நிதர்சனமான உண்மையாக அமைந்துள்ளது. நவம்பர் மாதம் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழையின் தீவிரம் காணப்பட்டது. அதன் பின்னர் இந்த ஆண்டு தொடங்கிய வுடன் மெல்ல மெல்ல மழையின் தாக்கம் படிப்படியாக குறைந்தது.
தை மாதம் பிறந்ததுக்கு பின்னர் தமிழ்நாட்டில் பெருவாரியான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நீடித்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இன்னும் சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று கூறியுள்ளது.
அதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இருப்பினும் இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதர மாவட்டங்களில் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஜனவரி 18ம் தேதியில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
ஜனவரி 19, 20 ஆகிய இரண்டு தினங்களில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
