தேநீர் அருந்த ரயிலை நடுவழியில் நிறுத்திய ஓட்டுநர்.!!
பீகார் மாநிலத்தில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த ரயிலை நிறுத்தி ஓட்டுனர் தேநீர் வாங்கி அருந்திய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவாலியர் எக்ஸ்பிரஸ் ரயில் பீகார் மாநிலத்தில் உள்ள சிவான் என்ற பகுதிக்கு சென்றபோது ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். அந்த ரயில் கடப்பதற்காக அங்கிருந்த லெவல் கிராசிங் மூடப்பட்டு இருந்ததால் வாகனங்கள் அங்கு காத்திருந்தனர்.
அப்போது ரயிலுக்கான உதவி ஓட்டுனர் அருகில் உள்ள தேநீர் கடைக்கு சென்று தேநீர் வாங்கிவந்து கொடுக்க ரயில் ஓட்டுனர் அதனை அருந்தினார். இதனை பார்த்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனிடையே லெவல் கிராசிங் மூடப்பட்டு இருந்ததால் ஆம்புலன்ஸ் ஒன்று சிக்கிக் கொண்டது. தேநீர் அருந்துவதற்காக ரயிலை நிறுத்தியது குறித்து விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏற்கனவே தயிர் வாங்குவதற்காக ரயிலை நிறுத்தியதால் ஓட்டுனர் பணியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
