காலையில் டிரைவர்…. மாலையில் கோடீஸ்வரர்…. ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு அடித்த ஜாக்பாட்……!

கடவுள் எப்போ எப்படி கொடுப்பார்னு யாருக்குமே தெரியாது ஆனா கொடுக்க வேண்டிய நேரத்தில் கரெக்ட்டா கொடுப்பார் என்பது உண்மை தான் போல. காலை வரை சாதாரண ஆம்புலன்ஸ் டிரைவராக இருந்த நபர் மாலையில் கோடீஸ்வரனாக மாறிய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நமக்கெல்லாம் எப்போ இப்படி நடக்க போகுதோ தெரியல.

கோடீஸ்வரர்

சரி நம்ம விஷயத்துக்கு போவோம். மேற்கு வங்க மாநிலம் பர்தாமன் மாவட்டத்தில் வசித்து வரும் ஷேக் ஹீரா ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. அந்த வகையில் எப்போதும் போல சமீபத்தில் ஒரு லாட்டரி சீட்டை வெறும் 270 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். அங்கு தான் அவருக்கு ஜாக்பாட் அடித்துள்ளது.

ஆமாங்க அவரே எதிர்பார்க்காத விதமாக அவர் வாங்கிய லாட்டரி சீட்டில் சுமார் 1 கோடி ரூபாய் பரிசு தொகை கிடைத்துள்ளது. திடீரென இவ்வளவு பெரிய தொகை கிடைத்ததும் என்ன செய்வதென தெரியாமல் முழித்த ஷேக் பணத்தை பெற்று கொண்டு நேரடியாக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு சென்ற ஷேக் தன்னிடம் நிறைய பணம் இருப்பதால் வீட்டுக்கு தனியாக செல்ல பயமாக உள்ளது. அதனால் எனக்கு வீடு வரை செல்ல பாதுகாப்பு வேண்டும் என கேட்டுள்ளார். ஷேக்கின் கோரிக்கையை ஏற்ற காவல்துறையினர் அவரை பாதுகாப்புடன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டனர்.

மிகுந்த வறுமையில் இருக்கும் ஷேக்கிற்கு இந்த பணம் மிக உதவியாக இருக்கும் என கூறியுள்ளார். மேலும் கடனை அடைத்து விட்டு வீடு கட்டுவதோடு உடல் நிலை சரியில்லாமல் இருக்கும் தனது தாய்க்கு சிகிச்சை அளிக்க போவதாகவும் ஷேக் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment