ஓடும் பேருந்தில் டிரைவருக்கு வலிப்பு… ஒருவர் பலி!!

கிருஷ்ணகிரியில் அரசு பேருந்து ஓட்டுனருக்கு வலிப்பு ஏற்பட்டதால் அடுத்தடுத்து இரு சக்கவாகனம் மீது மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் பேருந்து ஓட்டுனர் பழனிவேல் என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது.

அதில் பேருந்தின் அடியில் சிக்கிய இரு சக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டுனர் மற்றும் டிரைவர் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். அதே சமயம் முதியவர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் படுகாயமடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுப்பி வைத்தனர்.

பரந்தூர் விமான நிலையம்: பொதுமக்களின் பேரணி நிறுத்தம்..!!!

அப்போது முதியவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தற்போது போச்சம்பள்ளி அரசு மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்து குறித்து மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.