Connect with us

திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த ஆடை மற்றும் நகையின் மதிப்பு தெரியுமா?

nayan marr

பொழுதுபோக்கு

திருமணத்தில் நயன்தாரா அணிந்திருந்த ஆடை மற்றும் நகையின் மதிப்பு தெரியுமா?

காதல் பறவையாக டூயட் பாடிய நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்தது.சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் திருமணம் நடந்தது. திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமத்தைப் பிரபல ஓ.டி.டி நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது.

நயன்தாரா தன் திருமணத்தில் மரகதத்தால் ஆன சோக்கர் மற்றும் போல்கி கற்கள் பதிக்கப்பட்ட ரஷ்யன் பேட்டர்ன் நெக்லஸ் அணிந்திருந்தார். இத்துடன் ஏழு அடுக்குகள் கொண்ட ஆரம் அணிந்திருந்தார். இந்த ஆரம் வைரம் மற்றும் ரோஸ் கட்ஸ், போல்கி, மரகத கற்களால் ஆனது. மேலும் Cabochon என்ற கல் வகையைச் சுற்றி மரகத கற்கள், வைர கற்களால் ஆன காதணியை அணிந்திருந்தார்.

125346597 1ad856c8 79d7 4722 9b12 157c51b6439c

நயன் அணிந்திருந்த வளையலும் மரகதத்தால் ஆனது. இந்த நகைகள் இந்திய மதிப்பின் படி பல கோடிகளைத் தாண்டும்.நயன்தாரா தன்னுடைய திருமணத்தில் கைகளால் எம்பிராய்டரி டிசைன் செய்யப்பட்ட அடர் சிகப்பு நிற புடவையை அணிந்திருந்தார். இதில் செய்யப்பட்ட எம்பிராய்டரி டிசைன்கள் கர்நாடக பேரரசுகளான ஹொய்சாளர்கள் கட்டிய கோயில்களின் வடிவமைப்பில் இருந்து ஈர்க்கப்பட்டு எம்பிராய்டரி செய்யப்பட்டுள்ளது.

நயன்தாராவின் புடவை தான், கரிஷ்மா மற்றும் மோனிகா என்ற வட இந்திய டிசைனர்களால் கைகளால் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது.இதுதவிர நயன்தாராவுக்கு சுமார் 5 கோடி மதிப்பிலான வைர மோதிரத்தை பரிசாக அளித்துள்ளாராம் விக்னேஷ் சிவன்.

நயன்தாரா – விக்னேஷ் திருமணம் இத்தனை கோடியா? திருமணத்தில் அப்படி என்ன நடந்தது!

இதனை கரிஷ்மா மற்றும் மோனிகா என்ற வட இந்திய டிசைனர்கள் வடிவமைத்துள்ளனர். நயனின் பிளவுஸில் பெண் தெய்வம் லட்சுமியின் மோட்டிவ் டிசைன்கள் பொறிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் விக்கி, நயனின் பெயர்கள் மற்றும் அவர்களின் காதலைப் பறைசாற்றும் பேட்டர்ன்கள் கொண்ட சின்னச்சின்ன டிசைன்கள் பிளவுஸ் முழுவதும் நெய்யப்பட்டுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top