பெற்ற தாயால் தூக்கி வீசப்பட்ட குழந்தை… தாயாக மாறி காப்பாற்றிய நாய்… ஒரு நெகிழ்ச்சி சம்பவம்….!

சில சமயங்களில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது யார் மனிதர்கள் யார் மிருகங்கள் என்ற சந்தேகம் நமக்குள் தோன்றும். ஆம் சில நேரங்களில் ஆறறிவு கொண்ட மனிதர்கள் விலங்குகளாகவும், ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மனிதர்களாகவும் நடந்து கொள்வார்கள். அதற்கு உதாரணமாக பல சம்பவங்கள் நடந்துள்ளது.

அந்த வகையில் தற்போது ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அதன்படி முங்கேலி என்ற மாவட்டத்தில் சர்ஸ்டல் கிராமத்தில் சில தினங்களுக்கு முன்பு வைகோல் புதிரல் இருந்து பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாய் ஒன்று வைக்கோல் புதருக்குள் போவதும் வெளியே வந்து பொதுமக்களை பார்த்து குரைப்பதுமாக இருந்துள்ளது.

இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் புதருக்குள் சென்று பார்த்தபோது தொப்புள் கொடியுடன் ஒரு பச்சிளம் குழந்தை ஒன்று இருந்துள்ளது. அதன் அருகில் 7 நாய்குட்டிகளும் இருந்துள்ளன. இருப்பினும் குழந்தையின் உடலில் எந்தவித காயமும் இல்லை. குழந்தையை பெற்ற உடனே அதன் தாய் அந்த குழந்தையை வைக்கோல் புதரில் வீசியுள்ளார்.

அதன் பின்னர் அந்த தாய் நாய் தான் இரவு முழுவதும் குழந்தையை பாதுகாத்து இருந்துள்ளது. வைக்கோல் இருந்ததால் குழந்தை குளிரில் இருந்து தப்பியுள்ளது. இதனையடுத்து குழந்தையை மீட்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் குழந்தையை வீசி சென்ற தாயை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. பெற்ற தாயே குழந்தையை வீசிய நிலையில் ஒரு நாய் அந்த குழந்தைக்கு தாயாக இருந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment