Connect with us

சைக்கோ மருத்துவரின் வெறிச்செயல்!! நாயை கட்டி இழுத்துச் சென்ற அவலம்!!

1763943 dog

செய்திகள்

சைக்கோ மருத்துவரின் வெறிச்செயல்!! நாயை கட்டி இழுத்துச் சென்ற அவலம்!!

வடமாநிலங்களை பொறுத்தவரையில் கடந்த சில நாட்களாக செல்லப்பிராணிகளை துன்புறுத்தும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் மருத்துவர் ஒருவர் தனது செல்லப்பிராணியை சங்கிலியால் கட்டி காரின் பின்னால் ஓட விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் தனது காரின் பின்னால் நாய் ஒன்றை சங்கிலியால் கட்டி, காரின் பின்னால் ஓடவிட்டுள்ளார். அந்த நாய் ஓட முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற வாகன ஓட்டிகள் அவரை பின் தொடர்ந்து காரை நிறுத்தினர். பின்னர் நாயின் சங்கிலியை அவிழ்த்த அவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் தொண்டு நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மருத்துவர் என்பதும், தெரு நாயை அகற்றும் பொருட்டாக இத்தகைய செயலை செய்ததாக கூறியுள்ளார்.

இது குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் இதயமற்ற மருத்துவருக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top