கடலூரில் நல்ல பாம்பை கதறவிட்ட நாய்க்குட்டி! அரை மணி நேர தைரிய போராட்டம்!!

வீட்டின் செல்லப்பிராணியாக வளர்க்கப்படுகிறது நாய். இவை செல்லப்பிராணியாக மட்டுமில்லாமல் நன்றியுள்ள ஜீவன் ஆகவும் காணப்படுகிறது. பலநேரங்களில் இவை மனிதர்களுக்கு ஏற்ற தோழனாகவும் உள்ளது.

ஆபத்து நேரத்தில் தன் உயிரையும் பணயம் வைக்கும் குணத்தையும் செல்லப்பிராணி நாய் பெற்றிருக்கும். அதன்படி வீட்டின் காம்பவுண்டுக்குள் இருந்த நல்ல பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியது வளர்ப்பு நாய்க்குட்டி.

இந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் சின்ன கண்ணன்குப்பத்தைச் சேர்ந்த பிரியா தன் வீட்டில் வளர்ப்பு நாய் வளர்த்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவுடன் அந்த நாய் கத்திக் கொண்டே இருந்தது.

இதனால் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது அந்த நாய் வீட்டிற்குள் நல்ல பாம்பை நுழையவிடாமல் தைரியமாக குரைத்து போராடியது தெரியவந்தது. இதனால் அக்கம் பக்கத்தினர் ஒன்றுகூடி அந்த பாம்பை வீட்டிற்குள் நுழையாமல் எடுத்தனர்.

வளர்ப்பு நாய் கிட்டத்தட்ட அரைமணி நேரமாக அந்த பாம்போடு போராடியது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment