கல்லீரலில் கையெழுத்து போட்ட டாக்டர்- அடுத்தடுத்து அவருக்கு கிடைத்த கொடூர தண்டனைகள்!!

என்னது கல்லீரலில் கையெழுத்தா என்று ஆச்சரியப்படாதீர்கள். இந்த சம்பவம் இங்கு நடந்ததல்ல இந்த சம்பவம் இங்கிலாந்தின் பிர்மிங்ஹாம் நகரில் ராணி எலிசபெத் மருத்துவமனையில் நடந்தது.

இங்கு கல்லீரல் பிரிவில் பிர்மிங்ஹால் என்பவர் இருந்துள்ளார் .

2013ம் ஆண்டு அந்த மருத்துவமனையில் நடந்த கல்லீரல் அறுவை சிகிச்சையின்போது அந்த டாக்டர் ஒரு நோயாளிக்கு ஆபரேஷன் செய்து விட்டு கல்லீரலில் தனது கையெழுத்தை ஆட்டோகிராஃப் போல போட்டுள்ளார்.

இதை அந்த நோயாளி திடீர் என ஸ்கேன் எடுத்து பார்க்கையில் அறிந்துள்ளார்.

உடனே அந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் அவர் கேட்க, ஆஸ்பத்திரி  நிர்வாகம் டாக்டரிடம் அது பற்றி கேட்க தான் செய்த தவறை ஒப்புக்கொண்டுள்ளார் டாக்டர்.

ஆர்கன் பீம்  எனப்படும் மெசினை பயன்படுத்தி இந்த இனிஷியலை நோயாளியின் கல்லீரலில் பதித்ததாக அவர்  கூறினார் மேலும் இந்த செயலுக்காக அவர் மன்னிப்பு கோருவதாகவும்  தெரிவித்தார்

இதனை அடுத்து கடந்த  2014ல் அவர் தனது டாக்டர் பதவியையும் துறந்தார்.

ஆனாலும் மருத்துவமனை நிர்வாகம் விடாமல் மருத்துவ தீர்ப்பாயத்தில் டாக்டர் மீது புகார் அளித்தது.

அதில் மருத்துவர் பிரம்ஹாலை 5 மாதங்கள் சஸ்பெண்ட் செய்ததுடன் 10 ஆயிரம் பவுண்டுகள் அபராதம் விதித்ததும் மருத்துவ தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த தண்டனை அவருக்கு போதாது என உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த

நிலையில் டாக்டரின்மருத்துவ அங்கீகாரமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. டாக்டரின் மேற்படி செயலானது மருத்துவத் துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கெடுப்பதாக உள்ளது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment