கோபி அருகே உள்ள ஒட்டர்கரட்டுப்பாளையத்தில் பாலம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தலை கீழாக கவிழ்ந்த விபத்துக்குள்ளானது பரபரப்பை கிளப்பியுள்ளது.
இன்று அதிகாலை ஊஞ்சப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உடல்நலமில்லாத உறவினருக்கு மருந்து வாங்குவதற்காக காரில் சென்றுள்ளார். அப்போது கோபி அருகே ஒட்டர்கரட்டுப்பாளையத்தில் பாலம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கிய கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கனமழை காரணமாகவும், பள்ளம் இருப்பது தொடர்பாக முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததாலும் கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய செந்தில்குமார், பல்லடம் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.