Connect with us

திமுக அரசு வெறும் “4 அல்லது 5 வாக்குறுதிகளையே” நிறைவேற்றியுள்ளது!!

News

திமுக அரசு வெறும் “4 அல்லது 5 வாக்குறுதிகளையே” நிறைவேற்றியுள்ளது!!

47a204709f939a95638ce82164966cb4-1

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் தற்போது நம் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக உருவாகியுள்ளது முந்தைய ஆளும் கட்சியான அதிமுக. மேலும் அதிமுக சார்பில் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார் முந்தைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.மேலும் தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சங்கரன்கோவில், தென்காசி உள்பட தென் மாவட்டங்களில் சில பகுதிகளுக்கு சென்று இருந்தார்.85a3c837e5250d0f6cbe4b8f8c95e929

அங்கு தொண்டர்கள் மத்தியில் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. மேலும் அவர் அவ்வப்போது ஆளுங்கட்சியை விமர்சித்து வருவார். அந்த வரிசையில் தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுகவின் வாக்குறுதிகள் பற்றி கூறியுள்ளார். அதன்படி திமுக அரசு இதுவரை 4 அல்லது 5 வாக்குகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளதாக நான் கருதுகிறேன் என்று எடப்பாடிபழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் தமிழக முதலமைச்சர்  க ஸ்டாலின் இதற்கு முன்பு 202 வாக்குறுதிகளை தமிழக அரசு நிறைவேற்றி விட்டதாக கூறியிருந்தார். இவ்வாறு அவர் கூறியிருந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி தமிழக அரசின் வாக்குறுதிகளை பற்றி தனது கருத்தை கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top