Connect with us

தமிழகத்தில் செய்த செயலையே புதுச்சேரியிலும்..; ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக..!!

tea kadai

செய்திகள்

தமிழகத்தில் செய்த செயலையே புதுச்சேரியிலும்..; ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக..!!

தமிழகத்தில் செய்த செயலையே புதுச்சேரியிலும்..; ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்த திமுக..!!

தமிழகத்தில் ஏப்ரல் 14-ம் தேதி அன்று மாலை புத்தாண்டு தின சிறப்பாக ஆளுநர் ரவி தமிழகத்தில் உள்ள பிரதான கட்சிகளுக்கு தேனீர் விருந்து ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் திமுக மற்றும் திமுக கட்சி உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாத ஆளுநரின் விருந்து விழா வேண்டாம் என்று திமுகவினர் புறக்கணித்தனர்.

அதோடு மட்டுமில்லாமல் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் தேனீர் விருந்து விழாவை புறக்கணித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் தேநீர் விருந்து விழாவில் திமுக புறக்கணித்ததாக தெரிகிறது.

அதன்படி புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன் அளித்த தேநீர் விருந்தை காங்கிரஸ் மற்றும் திமுகவினர் புறக்கணித்தனர்.

புதுச்சேரிக்கு ஒரு நிரந்தர துணை ஆளுநர் நியமிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. இத்தகைய கோரிக்கை நிறைவேற்றப்படாததால் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அளித்த தேனீர் விருந்து விழாவை புறக்கணித்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top