Connect with us

தமிழகத்தில் ஒட்டு மொத்தமுள்ள 21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி…!

திமுக- காங்கிரஸ்

தமிழகம்

தமிழகத்தில் ஒட்டு மொத்தமுள்ள 21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி…!

தமிழகத்தில் ஒட்டு மொத்தமுள்ள 21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றி…!

தமிழகத்தில் இன்று மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 21 மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன்படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 21 மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். 20 மாநகராட்சிகளில் திமுக வேட்பாளர்கள் கும்பகோணத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளனர் .

நாகர்கோவில், ஓசூர், கடலூர், காஞ்சிபுரம் மற்றும் தஞ்சை மேயர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை, மதுரை, சேலம், திருச்சி, கோவை, கும்பகோணம், உள்ளிட்ட 16 மாநகராட்சிகளில் மேயர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

நாகர்கோவிலில் திமுக-பாஜக இடையே நடந்த பலப்பரீட்சையில் திமுகவின் வெற்றி பெற்றுள்ளார். ஓசூர், தஞ்சையில் திமுக-அதிமுக இடையே பலப்பரீட்சையில் திமுக வென்றது குறிப்பிடத்தக்கது.

காஞ்சிபுரம், கடலூரில் திமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து அதிருப்தியாளர்கள் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரப்பூர்வ வேட்பாளர்களான காஞ்சிபுரம் மகாலட்சுமி, கடலூர் சுந்தரி ராஜா வெற்றி பெற்றுள்ளனர்.

கோவையின் முதல் திமுக மேயராக கல்பனா, திருப்பூரில் தினேஷ்குமார் வெற்றி பெற்று பதவி ஏற்றனர். சென்னையில் 28 வயது இளம்பெண் பிரியா மேயராக பதவி ஏற்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top