Connect with us

திமுக கூட்டணி என்பது தொடர்ந்து நீடிக்கும்; தமிழக முதல்வர் திட்டவட்டம்!

samayam tamil 2

தமிழகம்

திமுக கூட்டணி என்பது தொடர்ந்து நீடிக்கும்; தமிழக முதல்வர் திட்டவட்டம்!

தமிழகத்தில் திமுக கூட்டணி என்பது தொடர்ந்து நீடிக்கும் என தமிழக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மனோரமா நியூஸ் நடத்தும் கருத்தரங்கில் செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழக முதல்வர் பதில் அளித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அரசியல்கட்சிகள் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகிறது. குறிப்பாக அதிமுக கட்சியில் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பினர் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.

இந்நிலையில் மனோரமா நியூஸ் நடத்தும் கருத்தரங்கில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் திமுக தலைமையிலான கூட்டணி என்பது தேர்தலுக்கான கூட்டணி அல்ல என தெரிவித்துள்ளார்.

இதற்கு மாறாக கொள்கைகளின் கூட்டணியாகவும் லட்சய கூட்டணியாக செயல்படுவதாக அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சிக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளையும் இடதுசாரிகள் வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அதே போல் மற்ற கட்சியினர் தமிழகத்தில் ஏற்படும் பிரச்சனைகளை அறிக்கை வாயிலாகவும், தங்களிடம் நேரடியாக வந்து புகார் கூறுவதாக தெரிவித்துள்ளார். இதனை உடனடியாக சரிசெய்வதாக கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top