#BREAKING பிப்.24-ல் விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு!

விழுப்புரம் மாவட்டத்திற்கு பிப்ரவரி 24ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சி.பழனி அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் சி பழனி அறிவித்துள்ளார்.

அன்றைய வேலை நாட்களுக்கு பதிலாக மார்ச் 4ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் வேலை நாட்களாக செயல்படும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.