மேயர், துணை மேயர்களுக்கான வேட்பு மனு விநியோகம் தொடங்கியது: நாளை மறைமுக தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் இருக்கக் கூடிய மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணை நகராட்சி தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் தேர்தலில் போட்டியிடக் கூடிய விருப்பமுள்ளவர்கள் வேட்பு மனுக்களை இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இவைகளை அந்தந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள தேர்தல் அமைப்பு அதிகாரிகளிடம் வேட்பு மனுக்களை பெற்று கொள்ளாலாம் என்றும் நாளைய தினம் காலை 9 மணி அளவில் மறைமுக தேர்தல் அவை கூடும் போது பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மேலும், நாளைய தினத்தில் குறிப்பிட்ட மேயர் துணை மேயர் , தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் போது குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஒருத்தர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டிருந்தால் அந்த நபர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
