Connect with us

அஜித்தின் ஏகே 63 படத்தின் இயக்குனர் யாரு தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்!

ajithissue 1562473427 1660143317

பொழுதுபோக்கு

அஜித்தின் ஏகே 63 படத்தின் இயக்குனர் யாரு தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்!

அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்து ‘அஜித் 61’ படத்தை உருவாக்கியுள்ளனர்.இதில் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.வங்கி கொள்ளை தொடர்பான கதையில் இந்த படம் தயாராகிவருகிறது.

இப்படத்தினை வரும் டிசம்பர் மாதம் அல்லது பொங்கலுக்கு திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள்.இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கிறார் அஜித். இதன் படப்பிடிப்பை நவம்பரில் துவக்க உள்ளனர்.

ajith 62

லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கும் அஜித் 62 வது படத்தின் கதைக்களம் இயற்கை விவசாய முறையில் சத்தான உணவு வகைகளை தயாரித்து தமிழகம் முழுவதும் கொடுக்கும் நபராக அஜித் நடிக்க உள்ளார்.சமந்தா தான் அஜித்தின் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக்க தகவல் வந்துள்ளது.

Suzhal 4

இளம் டைரக்டர்கள் முதல் டாப் டைரக்டர்கள் வரை பலரும் அஜித்துடன் இணைந்து பணியாற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் ஏகே 63 படத்தை சுதா கொங்கரா இயக்க போவதாக சமீபத்தில் ஒரு தகவல் பரவியது. ஆனால் அது குறித்து எந்த உறுதியான தகவலும் வரவில்லை.

pushkargayathri 1571380892 1656409606 1660143342

அஜித்தின் ஏகே 63 படத்தை, விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தாங்கள் அஜித்துடன் இணைந்து ஒரு படம் பண்ண உள்ளதாக சமீபத்திய பெட்டியில் கூறினார் புஷ்கர். அஜித்திற்காக கதை தயாரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினி, கமல் இணைந்து கலந்து கொள்ளும் ‛பொன்னியின் செல்வன்’ பாடல் வெளியீட்டு விழா!

ஆனால் இது பற்றி வேறு எந்த தகவலும் அவர்கள் தெரிவிக்காததால் இவர்கள் ஏகே 63 படத்தை தான் இயக்க போகிறார்களா அல்லது அஜித்தின் வேறு படத்தை இயக்க போகிறார்களா என்ற கேள்வி ரசிகரிடையே எழுந்துள்ளது.சமீபத்தில் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் வெளி வந்த சுழல் வெப்சீரிசும் நல்ல வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top