இயக்குனர் ரெடி… மறுபடியும் களமிறங்க போகும் லெஜண்ட்…

சினிமாவோ தொழிலோ எதுவாக இருந்தாலும் ஒரு காலகட்டத்திற்கு பிறகு எல்லோரும் ரிட்டைர்மென்ட் வாழ்க்கைக்குள் செல்வது வழக்கம். ஆனால் தனது ரிட்டைர்மென்ட் காலத்தில் சினிமாவிற்குள் அதுவும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் தன்னம்பிக்கையின் முழுஉருவமாக இருக்கும் லெஜண்ட் சரவணா அருள் அவர்கள் தான். இவர் இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்ட தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உடைய நிர்வாக இயக்குனர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.

ஜவுளி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் விற்க வேண்டும் என்ற கான்சப்டை கொண்டு வந்தவர் லெஜண்ட் சரவணா அவர்கள் தான். மேலும் அவைகளை விற்பனை செய்யும் கடைகள் தங்களது வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக நடிகைகளை வைத்து விளம்பர படங்களை எடுத்து விளம்பர படுத்துவர். ஆனால் லெஜண்ட் சரவணன் அவர்களோ தன்னுடைய கடையின் விளம்பரத்தில் தானே நடிக்க வேண்டும், ஏன் திரையின் பின்னால் ஒளிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தன்னுடைய கடை விளம்பரத்தில் பல நடிகைகளுக்கு நடுவே சாதரணமாக அல்ல ஒரு ஹீரோவின் தோற்றத்தில் ஆட்டம் பாட்டத்துடன் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர்.

தீபாவளி வந்தாலே வருடாவருடம் லெஜெண்ட் சரவணா அவர்களின் புத்தம் புது தோற்றத்தில் விளம்பரமும் வந்து விடும். முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா போன்றருடன் ஆடி பாடி பட்டையை கிளப்புவார். தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்ற பெயரே பிரபலம் ஆனது. கூடவே இவர் நடித்த விளம்பரங்கள் மக்களை சென்றடைந்தது. பலர் இவரை கிண்டல் செய்தாளும், விமர்சித்தாலும் கண்டுகொள்ளாமல் முன்னேறி கொண்டிருந்தார் லெஜண்ட் சரவணன் அவர்கள்.

அவரின் இந்த தொழில் யுக்தியால் அவரது நிறுவனம் பெரும் வளர்ச்சியடைந்து இந்தியாவிலேயே ஒரே குடும்பத்தால் நடத்த படும் சில்லறை வர்த்தக நிறுவனமாக வளர்ச்சியடைந்தது. இவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து செயல்படுவது தான். குண்டூசி முதல் வைரங்கள் வரை அனைத்தையும் மக்கள் ஆங்காங்கே தேடி அலையாமல் ஒரே இடத்தில் வாங்க வேண்டும் என்ற சிந்தனையை நடைமுறை படுத்தியது தான்.

20 விளம்பர படங்களுக்கு மேல் நடித்த லெஜண்ட் சரவணன் அவர்களை ஹீரோவாக்கி பார்த்தால் என்ன என்ற சிந்தனையை ஜே. டி. ஜெர்ரி லெஜண்ட் சரவணன் அவர்களிடம் தெரிவிக்கவே அவரும் ஒப்புக்கொண்டபின் உருவானது தான் ‘லெஜண்ட்’ திரைப்படம். 2022 ஆம் ஆண்டு இப்படம் படம் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தாலும், பலர் விமர்சித்தாலும், படம் அதிக லாபம் ஈட்டவில்லை என்பதே உண்மை.

அதற்கு பிறகு நெடுநாட்களாக அமைதியாக இருந்து வந்த லெஜண்ட் சரவணன் அவர்கள் மீண்டும் ஹீரோவாக நடிக்க உள்ளார் எனவும், ‘எதிர்நீச்சல் ‘, ‘காக்கிச்சட்டை’, ‘கோடி ‘, ‘பட்டாஸ்’ படப்புகழ் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.