பழைய பகையை தீர்த்துக் கொள்வாரோ? வனிதாவை டார்கெட் செய்யும் தாமரை!

பிக்பாஸ் ரசிகர்களை தன் வசம் இழுத்துக் கொண்டே மிகவும் கோலாகலமாக நடைபெற்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் அல்டிமேட். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த பிக்பாஸ் சீசன்களில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களே உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வாரம் பாலா தாமரைக்கு கேப்டன் பதவிக்கான போட்டி நடத்தப்பட்டது. இதில் தாமரை வெற்றி பெற்றார். கடந்த வாரம் முழுவதும் தாமரைக்கும் வனிதாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது.

இதனை வைத்து செய்யும் விதமாக தான் இந்த வாரம் தாமரை செயல்படுவார் என்று ரசிகர்கள் பேசிக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று வெளியான ப்ரோமோவும் அவ்வாறுதான் காணப்படுகிறது.

அதன்படி வனிதாவை பற்றி அனிதாவிடம் தாமரை பேசிக் கொண்டு வருகிறார். அப்போது அனிதா, வனிதா அந்த அணியில் போடுங்கள் வேலை செய்யவில்லை என்றால் பார்த்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்துகிறார்.

இதனால் ஒட்டுமொத்தமாக பிக் பாஸ் வீட்டில் உள்ளோர் வனிதாவை டார்கெட் செய்து வருவது தெரிகிறது. இதற்கு தனது பாணியிலேயே பதிலடி கொடுப்பாரா வனிதா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment