Connect with us

கொரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து!! ஆனால் அவர்களுக்கு மட்டும் ’செக்’..?

டிஜிபி

Tamil Nadu

கொரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து!! ஆனால் அவர்களுக்கு மட்டும் ’செக்’..?

கொரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் கொரோனா காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ரத்து செய்வதாக  தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஐஜிக்கள் , சக டிஐஜிகள் மற்றும் எஸ்.பி-க்களுக்கும்  டிஜிபி சைலேந்திரபாபு  சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். கொரோனா காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சட்டப்பேரவையில் ரத்து செய்யுமாறு தமிழக முதல்வர் கூறியதை சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே முதலமைச்சரின் உத்தரவின்படி கொரோனா காலங்களில் வன்முறையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது தொடர்பான வழக்குகளை தவிர்த்து மற்ற அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த உத்தரவினால் தமிழகத்தில் பல ஆயிரம் வழக்குகள் ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top