Connect with us

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

பொழுதுபோக்கு

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம் குறித்த முக்கிய தகவல்

7dcda36304a8e065786af61cd48c59d8

நயன்தாரா நடித்த ‘மாயா’ மற்றும் சந்திப் கிஷான் நடித்த ‘மாநகரம்’ ஆகிய படங்களள தயாரித்த ‘பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது.

இருப்பினும் இந்த தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. ‘பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகவும், அவருக்கு ஜோடியாக பிரியா பவானிசங்கர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை ‘ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கவுள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே அமிதாப்பச்சனுடன் ‘உயர்ந்த மனிதன்’ படத்திலும் தனுஷ் இயக்கும் 2வது படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top