
செய்திகள்
Breaking: டெல்லி துணை நிலை ஆளுநர் திடீர் ராஜினாமா!!
டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தனது பதவியை ராகினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கக்கூடிய நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநராக அனில் பைஜால் இருந்து வந்தார்.
டெல்லி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் ஆளுநர் பதவி என்பது முக்கியமாக அமைகிறது. இதனால் ஆளுநர், துணைநிலை ஆளுநர் என மத்திய அரசு நியமித்தது.
டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதலமைச்சர்கள் இருந்தாலும் பெரும்பாலான அதிகாரங்கள் துணைநிலை ஆளுநரிடம் உள்ளன. குறிப்பாக டெல்லியில் உள்ள காவல் துறை மற்றும் நிலம் சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் அனைத்தும் மத்திய அரசிடமே உள்ளது.
இதனால் மத்திய அரசின் அதிகாரங்களை ஆளுநரிடமே அமல்படுத்துகிறது. இந்த சூழலில் டெல்லி துணைநிலை ஆளுநராக அனில் பைஜால் ராஜினாமா செய்து உள்ளதாகவும் இந்த முடிவு தன்னுடைய தனிப்பட்ட முடிவு எனவும் தெரிவித்துள்ளார்.
