பாஜக தோற்பது ஜனநாயகத்திற்கு நல்லது! நாங்கள் வெற்றி பெறுவதில் வியப்பேதுமில்லை!! – திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவர் சவுகதா ராய்!

தற்போது மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த மேற்கு வங்க மாநிலத்தில் 3வது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.சவுகதா ராய்

இந்த நிலையில் தற்போது மேற்கு வங்கத்தில் இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பாஜக தோற்பது ஜனநாயகத்திற்கு நல்லது என்று விமர்சித்துள்ளது. அதன்படி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தோற்பது ஜனநாயகத்திற்கு நல்லது என்று  திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி தலைவர் சவுகதா ராய் கருத்து தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இடத்தில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிகள் நான்கிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கர்தகா, சந்திப்பூர், கொசபா, தின்ஹடா ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

இடைத்தேர்தலில் தீவிரமாக உழைத்த திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி வெற்றிபெறுவது வியப்பேதுமில்லை  என்று  திரிணாமுல்  காங்கிரஸ் கட்சி தலைவர் சவுகதா ராய் கூறியுள்ளார். பாரதிய ஜனதா தலைமையிலான அரசு மீது பொது மக்கள் வெறுப்படைந்துள்ளனர் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் சவுகதா ராய்  விமர்சித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment