
Tamil Nadu
சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்றுடன் நிறைவு!!
நம் தமிழகத்தில் தொடர்ச்சியாக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி இன்றைய தினம் வரை (மே 10ஆம் தேதி வரை) மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
முதல் முதலாக நீர்வளத்துறை தொடங்கி நேற்றைய தினம் வரை பல்வேறுவிதமான மானிய கோரிக்கை மீது விவாதிக்கப்பட்டது. இதில் அவ்வப்போது புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஒருசில கூட்டத்தொடர் நாட்களில் அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து வெளிநடப்புச் செய்தனர்.
இந்த நிலையில் இந்த கூட்டத்தொடர் இன்றைய தினத்தோடு நிறைவு செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இன்று இறுதி நாள் என்பதால் அனைத்து மானியக் கோரிக்கைகள் மீது மேற்பார்வையிட்டலாம் என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் பேசி முடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
