கட்டுப்படுத்த முடியாமல் பரவும் ஒமைக்ரான்! மகாராஷ்டிராவில் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆக உயர்வு!!

உலகிற்கே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி கொண்டு வேகமாக பரவி வருகிறது ஒமைக்ரான். குறிப்பாக தென்னாபிரிக்கா, பிரிட்டன், பிரேசில், இஸ்ரேல் போன்ற நாடுகளில் ஒமைக்ரானின் வீரியம் அதிகமாக காணப்படுகிறது.

ஒமைக்கிரான்

இவை ஐந்து மடங்கு வேகத்துடன் மிகுந்த வீரியம் உள்ளதாக காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இவை இந்தியாவிலும் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரானின்  தாக்கம் சற்று உயர்ந்து காணப்படுகிறது.

இன்று கர்நாடகாவிலும் ஒமைக்ரான் தாக்கம் கண்டறியப்பட்டது. இதனால் கர்நாடகாவில் மூன்று பேர் இதுவரை ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு கூறியுள்ளது. இவ்வாறு உள்ள நிலையில் மீண்டும் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒருவருக்கு ஒமைக்ரான்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இந்த ஒமைக்ரான் பாதிப்பு நாக்பூரில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான்  பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.இதனால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒமைக்ரானால்  பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment