தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் கல்வியில் மட்டுமின்றி தொழில் முனையும் நகரமாகவே காணப்படுகிறது. ஏனென்றால் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பல நகரங்களில் பட்டாசு தொழிற்சாலைகள் ஏராளமாக காணப்படுகின்றன.
குறிப்பாக இந்தியாவின் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படுகின்ற சிவகாசி பட்டாசு தொழிலை மையமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகள் விருதுநகர் மாவட்டம் முழுவதும் அதிகமாக காணப்பட்டாலும் வெடி விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகவே உயர்ந்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்திலுள்ள சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்தது.
இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. மஞ்சள் ஓடைப்பட்டி விபத்தில் ஆலை உரிமையாளர் கருப்பசாமி செந்தில் குமார் உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். வெடி விபத்தில் காயமடைந்த 3 தொழிலாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி களத்தூரில் ஜனவரி 1-ஆம் தேதி பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தின் போது அங்கு பணிபுரிந்த 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.