இலவச மருத்துவரின் உயிரிழப்பு, மருத்துவ உலகிற்கே பேரிழப்பு!:முதலமைச்சரின் உருக்கமான இரங்கல்;

மருத்துவர் அசோக்குமார்

மருத்துவம் என்பது தற்போது தொழிலாக காணப்பட்டது.ஆனாலும் இவர்கள் மத்தியில் மருத்துவத்தை தொழிலாகப் பார்க்காமல் சேவையாக செய்பவர்கள் நம் தமிழகத்தில் ஏராளமான உள்ளனர். அவர்களில் ஒருவர் மருத்துவர் அசோக்குமார்.

ஸ்டாலின்

அசோக்குமார் குறைந்த விலையில் மருத்துவம் செய்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மருத்துவர் அசோக்குமார் இன்று உயிர் இழந்துள்ளார். இதற்கு நம் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதன்படி மன்னார்குடி மருத்துவர் அசோக்குமார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேல் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்த அசோக்குமார் ஏழை எளியவர்களின் பாதுகாவலர் என்று கூறியுள்ளார்.

நரிக்குறவர் இன மக்களுக்கு இலவச மருத்துவ சேவை அளித்து மனிதநேயத்தின் மறு உருவமாக திகழ்ந்தார் அசோக்குமார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உருக்கத்தோடு இரங்கல் தெரிவித்துள்ளார். அசோக்குமார் மறைவு அடித்தட்டு மக்களுக்கும், மருத்துவ உலகிற்கும் பேரிழப்பு என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதோடு தமிழகத்தில் பிற தலைவர்களும் மருத்துவர் அசோக்குமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print