கேரளாவில் பிரியாணி சாப்பிட்ட மாணவியின் மரணத்தில் திடீர் திருப்பம்!

கேரள மாநில திருவனந்தபுரம் அடுத்த காசர்கோடு பகுதியில் வசிப்பவர் அனுஸ்ரீ பார்வதி (வயது 19). இவர் பிரபல தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டு தினத்தில் அனுஸ்ரீ தன்னுடைய குடும்பத்துடன் ஆன்லைனில் பிரியாணி வாங்கி சாப்பிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் திடீரென பிரியாணி சாப்பிட்ட அனுஸ்ரீ உட்பட 5 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து 4 பேர் குணமடைந்தனர். ஆனால் அனுஸ்ரீ பார்வதியின் உடல் நிலை மிகவும் மோசமான நிலைக்கு மாறியது.

பல பெண்களுடன் தொடர்பு! தட்டிக்கேட்ட மனைவி… திருச்சியில் பரபரப்பு!

இதனையடுத்து கர்நாடகா மாநிலம் மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவியின் உயிரிழப்பு தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் உட்பட 3 பேரிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

19 கிலோ கஞ்சாவை எலி தின்னுடுச்சு.. போலீசார் கொடுத்த அறிக்கையால் பரபரப்பு!!

இந்த சூழலில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் எலி மருந்து விஷம் காணப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. அதே போல் அவரது வீட்டில் போலீசார் கடிதம் ஒன்றை கைப்பற்றியதால் மாணவியில் மரணம் தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.