
தமிழகம்
திடீரென உயிரிழந்த சிறுவன்.. கதறி அழுத தாயும் மாரடைப்பால் பலி!!
செங்கல்பட்டு அருகே மகன் உயிரிழந்ததை தாங்க முடியாமல் தாயும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் செங்கப்பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ராஜா – சாந்தி தம்பதியினருக்கு ஜெய்கணேஷ் மற்றும் தருண் என்ற இரு மகன்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் 10-ஆம் வகுப்பு முடித்த ஜெய்கணேஷ் தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது மூச்சு திணறி கீழே விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் மகன் இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சாந்தி மகனின் உடலை கட்டித்தழுவி அழுதபோது அவரது தாய் சாந்தி மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், மகன் உயிரிழந்த கண்டு அதிர்ச்சியில் தாயும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
