திண்பண்டத்தை திருடிய சிறுமி மீது தீ வைத்து கொளுத்திய கொடூர தந்தை!

கருணை இன்மை, இரக்கமற்ற செயல், அன்பில்லாத நிலை போன்ற அனைத்தும் தற்போது நிலவிக்கொண்டு வருகிறது. இவை  குடும்பத்திலும் கூட மெல்ல மெல்ல வர தொடங்கியுள்ளது மிகுந்த வேதனை அளிப்பதாக காணப்படுகிறது.

தீ

ஏனென்றால் நம் தமிழகத்தில் தினந்தோறும் மகள்-அம்மா பிரச்சனை, தகப்பன் மகன் மகள் இப்படி தினந்தோறும் குடும்பத்தில் உள்ள நபர்கள் மத்தியிலேயே பிரச்சனை நிலவுகிறது. அவ்வப்போது இவை கொலையிலும் கூட சென்றடைகிறது.

இந்த நிலையில் பேக்கரியில் திருடியதாக சிறுமி மீது தீ வைத்த கொடூரம் அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் உள்ள பணகுடியில் நிகழ்ந்துள்ளது.

அதன்படி பணகுடியில் உள்ள பேக்கரியில் திண்பண்டத்தை திருடியதாக கூறப்பட்ட புகாரியில் சிறுமிக்கு தீ வைப்பு 3 சிறுமிகளை அவர்களின் தாயின் இரண்டாவது கணவர் அந்தோணிராஜ் தீ வைத்து எரிக்க முயன்ற கொடூர சம்பவம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

இதில் இரண்டு சிறுமிகள் தப்பிய நிலையில் தீக்காயமடைந்த 10 வயது சிறுமி அங்குள்ள ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment