மகனை கடப்பாரையால் கண்ணை குத்திக்கொலை செய்த கொடூர தந்தை..

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அடுத்த எலியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மயில் இவர் கேரளாவில் மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தனது மகளுக்கு பிறந்துள்ள குழந்தையை பார்ப்பதற்காக கேரளாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.இந்த நிலையில் தந்தை மயிலுக்கும் அவரது மகன் சசிகுமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது குடிபோதையில் இருந்த சசிகுமார் மற்றும் மயில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட நிலையில் மயில்சாமி தனது வீட்டில் இருந்த கடப்பாரையை கொண்டு சசிகுமாரின் கண்களில் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன சசிகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் பெற்ற மகனையே கடப்பாரையால் குத்தி கொலை செய்த மயில் என்பவரை கைது செய்தபோது போலீசார் குற்றவாளியை கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் வைத்து கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தை மகனுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கடப்பாரையால் மகனின் கண்ணில் குத்தி கொடூரமான முறையில் தந்தை மகனை கொலை செய்த சம்பவம் கச்சிராயபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment