கடலூரில் சோகம்! ஆற்றில் குளித்த இளைஞரை இழுத்து சென்ற முதலை!!

கடலூர் மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பேருந்து நிலையத்தில் இளைஞரை முதலை ஒன்று இழுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் ஆற்றில் 1000-க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் திருமலை ( வயது18) என்ற இளைஞர் ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது.

கறியில் நெளிந்த புழு! ஷாக்கான வாடிக்கையாளர்… சென்னையில் பரபரப்பு!!

அப்போது திடீரென வந்த முதலை ஒன்று திருமலையை ஆற்றுக்குள் இழுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அலறியபடி கரைக்கு திரும்பியுள்ளனர்.

பின்னர் அக்கம்பக்கத்தினர் போலீசார் மற்றும் தீயனைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இளைஞரின் உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

அதிர்ச்சி!! மாமனாரை துப்பாக்கியால் சுட்டு கொன்ற மருமகன்..!!

மேலும், குளிக்க சென்ற இளைஞரை முதலை இழுத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.