தங்க சங்கிலியை விழுங்கிய பசுமாடு…. இறுதியில் என்ன நேர்ந்தது தெரியுமா?

இந்தியா கலாச்சாரத்திற்கும் இறை வழிபாட்டிற்கும் பெயர் பெற்ற ஒரு நாடு. இங்கு கடவுளை மட்டுமல்ல கடவுளின் வாகனங்களாக கருதப்படும் விலங்குகளையும் கடவுளாக கருதி வழிபடுவது வழக்கம். உதாரணமாக பாம்பு, பசு, யானை போன்ற விலங்குகளை வழிபட்டு வருகிறார்கள் நம் மக்கள்.

 பசுமாடு

அந்த வகையில் வீட்டில் வளர்க்கப்படும் பசுக்களை கோமாதாவாக வழிபட்டு வருகிறார்கள். லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படும் பசுக்களை அலங்கரித்து மாலை அணிவித்து அவற்றிற்கு படையல் வைத்து நம் மக்கள் வழிபாடு செய்து வருகிறார்கள்.

அப்படி ஒரு பசுவிற்கு தங்க செயின் மற்றும் மாலைகள் அணிவித்து வழிபாடு செய்த போது எதிர்பாராத விதமாக அந்த பசு தங்க செயினை விழுங்கியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம், சிர்சி தாலுகா, ஹீப்பனஹள்ளி கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீகாந்த் ஹெக்டே என்பவருக்கு சொந்தமாக 4 வயதுள்ள பசு மற்றும் கன்று உள்ளது.

கடந்த தீபாவளியை முன்னிட்டு, கோ பூஜையின் போது, ​​அவரின் குடும்பத்தினர் பசு மற்றும் கன்றுக்குட்டியை குளிக்க வைத்து, பூஜை செய்ததோடு பசுவின் கழுத்தில் 20 கிராம் எடையுள்ள தங்க சங்கிலியை அணிவித்துள்ளனர். இந்நிலையில் சிறிது நேரத்தில் தங்க செயின் காணாமல் போயுள்ளது.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பசு விழுங்கி இருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, ஸ்ரீகாந்தின் குடும்பத்தினர் ஒவ்வொரு நாளும் பசு மற்றும் கன்றின் சாணத்தை சோதித்தனர். ஆனால் சங்கிலி கிடைக்காததால், இறுதியாக, உதவிக்காக கால்நடை மருத்துவரிடம் சென்றனர்.

அவர் பரிசோதனை செய்ததில் பசுவின் வயிற்றில் செயின் இருப்பது தெரிய வந்தது. பின்னர் பசுவுக்கு அறுவை சிகிச்சை செய்து தங்கச் சங்கிலி அகற்றப்பட்டது. ஆனால் சங்கிலியின் ஒரு சிறிய பகுதி காணாமல் போனதால், அது 18 கிராம் எடையுள்ளதாக உள்ளதாம். இனி இதுபோன்ற விபரீத செயல்களில் யாரும் ஈடுபடாதீர்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment