தாயை ஒழுங்காக பராமரிக்காத மகன்; செட்டில்மெண்ட் பத்திரம் ரத்து!!

தற்போது நாம் அன்பு குறைந்துள்ள காலத்தில் வாழ்ந்து வருகிறோம். ஏனென்றால் மகன்கள் மகள்கள் தங்களின் சொந்த பெற்றோருக்கே கடைசி காலத்தில் உதவுவதற்கு யோசிக்கும் நிலைமையில் காணப்படுகின்றனர்.

இதனால் அவர்கள் பலரும் செட்டில்மெண்ட் முறையில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் செட்டில்மெண்ட் பத்திரம் குறித்து ஹை கோர்ட் புதிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.

அதன்படி பராமரிக்க நிபந்தனை விரிக்காவிட்டால் வாரிசுக்கு கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை பெற்றோர் ரத்து செய்ய முடியாது என்று ஹைகோர்ட் கூறியுள்ளது. தாயின் பராமரிப்பு செலவுக்கு மாதம் 2000 ரூபாய் போதுமானதாக இருக்காது என்றும் அதனால் வாரிசுகள் மாதம் 5000 ரூபாய் வழங்க மனுதாரருக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தாய் சின்னம்மாள் எழுதிக் கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்த அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவை எதிர்த்து மகன் வழக்கு தொடுத்திருந்தார். மகனுக்கு எழுதி கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாட, தாய்க்கு சாதகமாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment