ஹாரி பாட்டர் உலகில் திருமணம்.. மெய்நிகர் திருமணத்துக்கு இறந்துபோன தந்தையும் வர ஏற்பாடு!
தற்போது திருமணங்களைத் தனித்துவமான முறையில் பலரும் பேசும் வகையில் செய்ய வேண்டும் என்பதில் புதுப் புது ஐடியாக்களைப் புகுத்துகின்றனர் மணமக்கள்.
அந்தவகையில் சென்னை ஐ.ஐ.டியில் பணிபுரிந்துவரும் தினேஷ் என்பவருக்கும் ஜனக நந்தினி என்ற பட்டதாரிப் பெண்ணுக்கும் இதுவரை யாரும் கேட்டிராத மெய் நிகர் திருமணம் நடைபெற உள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அதாவது மெட்டாவர்ஸ் என்று அழைக்கப்படும் மெய் நிகர் முறை என்பது தங்களுக்கான உலகினை தானே 3 டியில் உருவாக்கும் முறையாகும்.
இந்த முறையில் அனைத்துக் கதாபாத்திரங்களை தங்களுக்குப் பிடித்ததுபோல் நடை, உடை என அனைத்தையும் உருவாக்கி அத்துடன் நமக்குப் பிடித்த வகையிலான இடத்தினை உருவாக்கி அங்கு திருமணத்தை நடத்த உள்ளனர்.
இந்த திருமணத்தில் பல ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன ஜனகநந்தினியின் தந்தையும் கலந்து கொள்வார் என்று மாப்பிள்ளை கூற பெண் வீட்டார் மிகவும் அதிசயித்துப் போய் அந்த நாளுக்காக எதிர்பார்த்து உள்ளனர்.
பிப்ரவரி 6 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த மெய் நிகர் திருமணத்தினை டார்டிவர்ஸ் என்ற நிறுவனம் மெட்டாவர்ஸ் முறையில் நடத்திக் கொடுக்க உள்ளது.
ஹாலிவுட் திரைப்படமான ஹாரி பாட்டார் பட உலகில் தினேஷ்- ஜனகநந்தினி திருமணம் நடைபெற உள்ளதாம்.
