Connect with us

திட்டமிடப்பட்டபடி கோவையிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்; வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை!

Coimbatore 770x433 1

தமிழகம்

திட்டமிடப்பட்டபடி கோவையிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்; வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை!

திட்டமிடப்பட்டபடி கோவையிலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்; வாக்கு எண்ணிக்கைக்கு தடையில்லை!

பிப்ரவரி 19ஆம் தேதி அன்று சனிக்கிழமை தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது கோவை மாநகராட்சியில் அதிக சர்ச்சையான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டுதான் வந்தது. அதுவும் குறிப்பாக கோவையில் பணப்பட்டுவாடா நிகழ்ந்ததாக ஹைகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அதோடு மட்டுமில்லாமல் கோவையில் வாக்கு எண்ணிக்கை தடை செய்ய வேண்டும் என்று மனுதாரர் கூறியுள்ளார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் கோவையில் வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை என்று கூறியுள்ளது.

கோவை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் அனைத்தும் வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறினர். வழக்கு தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கட்சியினரும் வாக்காளர்களுக்கு பணம் தந்ததாக ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த நீதிபதி தலைமையில் குழு அமைக்கவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top