என்றோ சொன்ன உத்தரவு…… இன்று நிறைவேற்றிய கவுன்சிலர்; பதவி ராஜினாமா!!
மார்ச் 4 ஆம் தேதி நம் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு இடையே மறைமுக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு பெரும் ஏமாற்றம் அமைந்ததாக காணப்பட்டது.
ஏனென்றால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவின் போட்டி வேட்பாளர்கள் பங்கேற்று பல இடங்களில் வெற்றியும் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் கூட்டணி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டணி கட்சிகளுக்குரிய இடங்களில் போட்டியிட்டவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.
அதன் தொடர்ச்சியாக தற்போது வரை கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் வெற்றி பெற்றவர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கொண்டு வருகின்றனர். மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி துணை தலைவர் ராஜினாமா செய்துள்ளார். தேனி மாவட்டம் மேலசொக்கநாதபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து திமுகவை சேர்ந்த குணசேகரன் ராஜினாமா செய்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துணை தலைவர் பதவியில் இருந்து திமுக கவுன்சிலர் ராஜினாமா செய்தார்.
