செலவு வெறும் 6 ரூபாய் தான்… ஆனால் வருமானம் 1 கோடி…. முதியவருக்கு அடித்த ஜாக்பாட்…..

நம்ம நாட்ல ஒரு சமயத்தில் லாட்டரி சீட்டு விற்பனை புழக்கத்தில் இருந்து வந்தது. ஆனால் இதன் மூலம் மக்கள் வேலைக்கு போகாமல் அதிர்ஷ்டத்தை நம்பி சோம்பேறியாகி வந்ததால் அரசாங்கம் இதற்கு தடை விதித்தது. தற்போது தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை புழக்கத்தில் இல்லை. ஆனால் இதர மாநிலங்களில் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.

தற்போது இந்த லாட்டரி மூலம் ஒரு முதியவர் கோடீஸ்வரன் ஆகியுள்ளார். மேற்குவங்க மாநிலம் ஜாய் நகரை சேர்ந்த 61வயதாகும் பிரபீர் பிராமணிக் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர். இவர் பல ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட வென்றதில்லை. இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து வாங்கி வந்துள்ளார்.

பலர் கூறியும் கேட்காமல் தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கி வந்த பிரபீருக்கு அதிர்ஷ்டம் கூரையை பிய்த்து கொண்டு கொட்டியுள்ளது. ஆமாங்க சமீபத்தில் பிரபீர் வெறும் 6 ரூபாய்க்கு ஒரு லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். தற்போது அதில் சுமார் ஒரு கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளது. இதனால் பிரபீர் இன்பதிர்ச்சி அடைந்துள்ளார்.

தனக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது என பிரபீர் கூறியபோது அவரின் குடும்பத்தார் யாருமே நம்பவில்லையாம். இன்னும் சிலர் பிரபீர் பொய் பேசுகிறார் என்று சந்தேகம் அடைந்துள்ளனர். தற்போது லாட்டரியில் வென்ற பணத்தில் என்ன செய்யலாம் என பிரபீர் ஒரு லிஸ்ட்டே போட்டு வைத்துள்ளாராம்.

பழுதான தனது வீட்டை புதிதாக எடுத்து கட்டுவது தான் பிரபீரின் முதல் செயல் என கூறியுள்ளார். பிரபீர் ஒரு கோடி ரூபாய் லாட்டரியில் வென்ற செய்தி காட்டுத்தீ போல பரவியுள்ளதால், பணம் திருடு போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாம். எனவே போலீசாரிடம் பாதுகாப்பு வழங்குமாறு பிரபீர் கேட்டு கொண்டுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment