பொங்கல் லீவுக்கு சொந்த ஊருக்கு சென்றதால் தான் கொரோனா அதிகரித்திருக்கும்!: அமைச்சரின் அதிர்ச்சிகரமான பேட்டி

கடந்த மாதம் முழுவதும் தமிழகத்தில் பொங்கல் விடுமுறை தினங்கள் கொண்டாடப்பட்டது. பொங்கல் தினத்தில் பல வெளியூர்களில் வேலை பார்க்கும் மக்கள் விரைந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இவ்வாறு சென்றதால் தான் கொரோனா அதிகரித்துள்ளதாக அமைச்சர் ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

சுப்பிரமணியன்

அதன்படி பொங்கல் விடுமுறைக்கு பலர் தங்கள் சொந்த ஊர் சென்றதால் கிராமங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.

இரண்டு மூன்று நாள் கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாலும் அச்சப்பட தேவையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை-ஸ்டான்லி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து இத்தகைய பேட்டி அளித்தார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 1.92 லட்சம் படுக்கைகளில் 9000 படுக்கைக நிரம்பி உள்ளன என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். கொரோனா தொற்று பாதித்த 94% பேர் வீட்டு தனிமையில் உள்ளனர் என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment