ஆப்பிரிக்காவில் பரவும் கொரோனா மிகவும் ஆபத்தானது! மத்திய அரசு விழிப்போடு செயல்பட வேண்டும்-ராகுல் காந்தி;

கடந்த இரு நாட்களாக ஆப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தென் ஆப்பிரிக்க மற்றும் அதை சுற்றியுள்ள நாடுகளில் இந்த உருமாறிய கொரோனாவின் தாக்கம் அதிதீவிரமாக காணப்படுகிறது.

ராகுல் காந்தி

இதனால் இன்று காலை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்பிரிக்கா இடையே உள்ள விமானப் போக்குவரத்து சில நாட்களுக்கு இருக்காது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் இன்று காலை ப நரேந்திர மோடி இந்த உருமாறிய  கொரோனாக்காக அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு இருந்தார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி ஆப்பிரிக்காவில் பரவி வரும் புதிய வகை கொரோனா மிகவும் ஆபத்தானது என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கூறியுள்ளார். பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியுள்ளார். தடுப்பூசி விவரங்களை வெளியிடுவது எவ்வித ஒளிவு மறைவும் இருக்க கூடாதென என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment