கட்டுக்கடங்காத வேகத்தில் காட்டுத்தீ போல பரவுகிறது கொரோனா! அச்சத்தில் பிரிட்டன் மக்கள்!!

கண்ணுக்குத் தெரியாமல் மனிதனின் உடலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இறுதியில் உயிரிழப்பிற்கு தள்ளும் மிகக் கொடிய வைரஸ் கொரோனா. இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிக வேகத்தோடு கொரோனா வேகமாக பரவியது.

இந்த நிலையில் இந்தியாவின் பெரும் முயற்சியால் இந்த ஆட்கொல்லி நோயான கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இந்த கொரோனா  பரவல் சற்று குறைந்துள்ளது.

ஆனால் இன்னும் குறையாத வேகத்தில் அதிகளவு பாதிப்பினை பிரிட்டன் நாட்டில் கொரோனா  புரிந்து வருவதாக அங்குள்ள சுகாதாரத்துறை அமைப்பு கூறியுள்ளது. அதன்படி நேற்றைய தினம் ஒரே நாளில் மட்டும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 78610 பேருக்கு கொரோனா  தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா  தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டுள்ளது கண்முன்னே தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment