கொரோனா இரண்டாவது அலை மாதிரி கிடையாது மூன்றாவது அலை! தமிழ்நாட்டில் குறைந்துவிட்டது;
இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா இரண்டு அலைகளாக வீசியது. ஏனென்றால் கொரோனா தாக்கம் இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் உச்சத்தில் இருந்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல இந்தியா கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
இவ்வாறு இருந்த நிலையில் கடந்த மாதம் இந்தியாவில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தது. இதனால் 3வது அலை இந்தியாவில் அதிக அளவில் பரவும் என்று சுகாதாரத்துறை மற்றும் பொதுமக்கள் பலரும் அச்சத்தில் இருந்தனர்.
இந்த நிலையில் சுகாதாரத்துறை மக்களுக்கு ஒரு மகிழ்ச்சி இருக்கும் தகவலை கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவல் குறைய தொடங்கி உள்ளதாக சுகாதாரத் துறை தகவல் அளித்துள்ளது.
தமிழகத்தில் மூன்றாவது அலையில் நான்கு சதவீதத்தினருக்கு மட்டுமே சிகிச்சைக்கான தேவை உள்ளது என்று சுகாதாரத் துறை கூறியுள்ளது. 2வது அலை ஒன்பது வாரங்களில் உச்சம் அடைந்த நிலையில் மூன்றாவது அலை மூன்று வாரத்தில் உச்ச நிலையை அடைந்தது என்றும் சுகாதாரத் துறை கூறுகிறது.
தற்போது தமிழகத்தில் 1.58 லட்சம் பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதாரத்துறை கூறியது.
