
செய்திகள்
எச்சரிக்கை! கொரோனா சவால் இன்னும் முறியடிக்கப்படவில்லை…!!
இன்றைய தினம் பாரத பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதிலும் குறிப்பாக இன்று கொரோனா பற்றி பல்வேறு விதமான தகவல்களை அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஏனென்றால் கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் சற்று அதிகமாக உள்ளது. இந்த நிலையில் பேசிய அவர் கொரோனா தொற்று பரவல் சவால் இன்னும் முறியடிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
உலக நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியா மிகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றும் கூறினார். இருப்பினும் ஒரு சில மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறினார்.
எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தகுதியுடைய 96 சதவீத பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும் 85% பேர் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளதாக கூறினார்.
மருத்துவ கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகளை பலப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். பொது இடங்களில் கொரோனா தடுப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
