
Tamil Nadu
உச்சத்தைத் தொட்ட கொரோனா பாதிப்பு.!! சென்னையில இல்லைங்க?
நம் நாட்டில் தற்போது நாளுக்குநாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனாவின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கொண்டு வருகிறது.
இதனால் மக்களிடையே மீண்டும் பீதி கிளம்பியுள்ளது. இவ்வாறுள்ள நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 800 வரை கொரோனாவின் பாதிப்பு பதிவாகி மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனாவின் பாதிப்பு பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் 737 பேருக்கு கொரோனாவின் பாதிப்பு உறுதியான நிலையில் இன்று 771 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஆயினும் இன்று பாதிப்பினால் புதிய உயிரிழப்பு நிகழவில்லை. தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்து 206 ஆக உள்ளது. மேலும் தலைநகர் சென்னையில் ஒரே நாளில் புதிதாக 345 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது என்று தெரிகிறது.
சென்னையில் நேற்றைய தினம் 373 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில் இன்று பாதிப்பு 345 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
