இந்தியாவின் கைக்குள் வந்தது கொரோனா!: பாதிப்பு, குணமடைந்தோர், உயிரிழந்தோர் நிலவரம்;

சில மாதங்கள் முன்பு உலகிற்கே மிகப்பெரிய அச்சத்தை கொடுத்து வேகமாக பரவிய வைரஸ் கிருமி கொரோனா. ஆனால் தற்போது கொரோனா இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது என்றே கூறலாம்.

கொரோனா

இந்தியாவின் பெரும் முயற்சியால் இந்த கொரோனா நோயின் விகிதம் படிப்படியாக குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 765 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 477 பேர் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்து 724 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 99 ஆயிரத்து 763 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை 3 கோடியே 40 லட்சத்து 37 ஆயிரத்து 054 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8548 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இந்தியாவில் நேற்றைய தினம் மற்றும் 80 லட்சத்து 36 ஆயிரத்து 261 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 124 கோடியே 96 லட்சத்து 19 ஆயிரத்து 515  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment