
தமிழகம்
பயணியிடம் சில்மிஷம்..; நடந்ததை திசை திருப்ப நடத்துனர் முயற்சிக்கிறாரா?
நம் தமிழகத்தில் அவ்வப்போது அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பயணிகளால் தாக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இதுபோன்று விருத்தாச்சலம் அருகே பேருந்து நடத்துனர் ஒருவர் தாக்கப்பட்டு இருந்தார்.
மேலும் அவர் மீது பெண் பயணியிடம் தவறாக முயன்றதாக புகார் எழுந்துள்ளது. அதன்படி விருத்தாசலம் அருகே பேருந்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் நடத்துநர் மீது புகார் எழுந்த நிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
பெண் பயணியிடம் தவறாக நடக்க முயன்றதாக நடத்துநர் மீது புகார் எழுந்துள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நடந்ததை திசை திருப்ப பேருந்தில் தான் தாக்கப்பட்டதாக நடத்துனர் புகார் தெரிவித்துள்ளாரா? எனவும் விசாரணை நடைபெறுகிறது.
விருத்தாச்சலத்தில் நடத்துனர் தாக்கப்பட்டதாக கூறி அரசு பேருந்துகளை சாலையில் நிறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. விசாரணையின் முடிவில் தான் போராட்டம் ஓயும் என்றும் தெரிகிறது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
