Connect with us

பிரம்மாண்ட இயக்குனரின் படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரம்மாண்ட தொகைக்கு தட்டி தூக்கிய நிறுவனம்…!

shankar

பொழுதுபோக்கு

பிரம்மாண்ட இயக்குனரின் படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரம்மாண்ட தொகைக்கு தட்டி தூக்கிய நிறுவனம்…!

பிரம்மாண்ட இயக்குனரின் படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரம்மாண்ட தொகைக்கு தட்டி தூக்கிய நிறுவனம்…!

ஒரு மொழியில் மட்டும் படம் வெளியானால் வசூலில் கல்லா கட்டாது என்பதால் சமீபகாலமாக பான் இந்தியா படங்களை அதிகளவில் இயக்கி வருகிறார்கள். ஒரு மொழியில் சற்று குறைந்தால் கூட இதர மொழிகளில் கல்லா கட்டி விடலாம் என்பதால் அனைத்து இயக்குனர்களும் பான் இந்தியா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

அதே போல் சமீபத்தில் வெளியான பான் இந்தியா படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. தற்போது இந்த வரிசையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரும் பான் இந்தியா படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதுவரை தமிழில் படங்களை இயக்கி வந்த சங்கர் தற்போது தெலுங்கில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இளம் நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தற்காலிகமாக ஆர்சி 15 என பெயர் வைத்துள்ளனர். பான் இந்தியா படமாக 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட இப்படத்தில் இடம்பெற்ற ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் சங்கர் பல கோடி செலவழித்ததாக கூறப்பட்டது.

பிரம்மாண்ட இயக்குனர் என்றால் சும்மாவா? மேலும் படத்தின் மொத்த பட்ஜெட் சுமார் 170 கோடி என படக்குழுவினர் திட்டமிடப்பட்டுள்ளனர். சங்கர் படம் என்பதால் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்ற பல நிறுவனங்கள் போட்டி போட்டன.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஜீ நெட்வெர்க் நிறுவனம் ஆர்சி 15 படத்தின் டிஜிட்டல் உரிமையை சுமார் 200 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் காட்சிகள் மற்றும் பாடல்களை இந்நிறுவனமே வெளியிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top