எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை? ஏப்ரல் 26-இல் ஆணையம் முடிவு…!
2016 ஆம் ஆண்டு மீண்டும் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார் ஜெயலலிதா. ஆனால் அவர் ஆட்சிக்கு வந்து ஓராண்டு கூட முதல்வராக இல்லை என்றே கூறலாம்.
ஆட்சியில் இருக்கும் போது அவர் திடீரென்று உயிரிழந்தார். அவரின் உயிரிழப்பு பற்றி இன்று வரையும் விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் apollo மருத்துவர்கள் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆஜராகி வாக்குமூலம் அளித்து கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை விசாரிப்பது பற்றி ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த விசாரணையை ஏப்ரல் 26 ஆம் தேதியில் முடிவு செய்கிறது ஆறுமுகசாமி ஆணையம்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து விசாரணை நடந்து கொண்டு வருகிறது. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி தொடர்ந்து 2 நாட்களாக வாக்குமூலம் அளித்தார்.
அவரிடம் 90க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் சசிகலா ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் சதித்திட்டம் திட்ட வில்லை என்று பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்.
