
தமிழகம்
மக்களே மகிழ்ச்சி; வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!! டீயின் விலை குறைய வாய்ப்பு?
தமிழகத்தில் ஏப்ரல் மாத ஆரம்பத்தில் அத்தியாவசிய பொருட்களான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை சற்று அதிகரித்தது. அதுவும் குறிப்பாக வணிக பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை 250 ரூபாய் வரை உயர்ந்தது.
இதனால் அனைத்து ஹோட்டல்களிலும் டீக்கடைகளிலும் உணவு பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக சென்னையில் டீயின் விலை 12 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 187 குறைந்துள்ளது.
இதனால் அங்கு ஒரு வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் ரூபாய் 2186க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் ரூபாய் 2373 க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் விலை இன்று முதல் ரூபாய் 2186 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
